சீர் வாசகர் வட்டம்

தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதையும், தரமான இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து, நேர்த்தியான வடிவமைப்பில், ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதையும் எங்கள் முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளோம். மக்கள் பதிப்பு என்னும் முயற்சியின் மூலம், தரமான நூல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதோடு, லட்சக்கணக்கான குடும்பங்களில் தனிநபர் நூலகங்களை உருவாக்க வேண்டும் என்பதும் எங்கள் இலக்கு. இந்த நீண்ட பயணத்தில் தன்னார்வத்துடன் இணையும் ஒவ்வொரு வாசகரும் மாபெரும் வாசகச் சங்கிலியில் ஒரு முக்கிய கண்ணி.

Aangila Aasan

Our Story

“எல்லோர் கைகளிலும் புத்தகங்கள்; எல்லோர் வீடுகளிலும் நூலகங்கள்” என்ற இலக்குடன் செயல்படுகிறது சீர் வாசகர் வட்டம்.

தரமான நவீன இலக்கியங்களை குறைந்த விலையில் மக்களின் கைகளுக்குக் கொண்டு சேர்ப்பதே சீர் வாசகர் வட்டத்தின் முதன்மையான நோக்கம். நல்ல நூல்கள் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல; அனைவரும் வாங்கிப் படிக்கக்கூடிய விலையில் அவை கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையை முன்னெடுப்பதே இதன் தனிச்சிறப்பு.

பிற பதிப்பகங்கள் வெளியிடும் தரமான அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நூல்களையும் சிறப்பு சலுகை விலையில் மொத்தமாக வாங்கி, அவற்றை அதிக எண்ணிக்கையிலான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் சீர் வாசகர் வட்டத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.

இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் பள்ளிகளைத் தத்தெடுத்து, “புத்தகத் தூதுவர்” திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வாசிப்பை ஒரு தனிநபரின் பழக்கமாக மட்டுமல்லாமல், சமூகத்தின் பண்பாட்டு இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

“மக்கள் பதிப்பு” என்ற கருத்துக்கு புதிய இலக்கணத்தை உருவாக்கியதும் சீர் வாசகர் வட்டத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். சிறந்த படைப்புகளை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டு, அவற்றை மிகக் குறைந்த விலையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், புத்தக வாசிப்பை பரந்துபட்ட மக்களுக்கான ஒன்றாக மாற்றும் முயற்சியை இது மேற்கொள்கிறது.

தமிழகம் முழுவதும் பல வாசகர்கள் தன்னார்வத்துடன் இணைந்து, இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். புத்தகங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல், அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது, புதிய வாசகர்களை உருவாக்குவது, பள்ளி மாணவர்களிடம் வாசிப்பை வளர்ப்பது என வாசிப்பைச் சுற்றி ஒரு சமூக இயக்கத்தையே உருவாக்குவது சீர் வாசகர் வட்டத்தின் நோக்கமாக உள்ளது.

நல்ல புத்தகங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்; ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் உருவாக வேண்டும் என்ற கனவை நோக்கி செயல்படும் ஒரு வாசிப்பு இயக்கமே சீர் வாசகர் வட்டம்.

Book Inauguration
Book Inauguration

Join the community

Enter your email address to receive regular updates, as well as news on upcoming events and specific offers.
Best Sellers