சீர் வாசகர் வட்டம்
SIR PAPER
SIR PAPER
- புத்தகம் 7 - 10 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
Couldn't load pickup availability
விடிந்ததும் துவங்கும் வேலைகளைக் கொண்டே உழைப்பின் இலக்கணங்களை வகுத்து இங்கு வாழ்வை நகர்த்திடும் நம்முள்ளும் ,கண்கள் விழிக்க கண்கள் தடுமாறிடும் நேரத்திலும் ஊசித் துளையிடும் மழைத் துளியிலும் குறுக்கி பிழிந்திடும் குளிரின் பிடிக்கு பயந்திங்கு மிதிவண்டி மிதித்திடும் வியர்வை காண சூரியனும் பல முறை தவிர்த்திடும். சார் பேப்பர்...சார் பேப்பர்...என்றொரு வாடிக்கை வாக்கியம் காதுக்குள்ளே கேட்டிருக்கும்...கண்கள் இருந்தும் எத்தனை பேர் அவர் முகத்தின் வியர்வையைக் கண்டிருப்போம்...நாளொன்றுக்கு அவன் கேட்கும் ஏசல்களை எண்ணியிருப்போம்...இவனுக்கும் உறக்கம் இருக்காதோ என்றொரு எண்ணம் எத்தனை முறை கொண்டிருப்போம்... உயிர்கள் எழுந்திட துவங்கும் முன் ஓடிடும் இவர்களது அவசரம் கொஞ்சம் இளைப்பாற நொடிகள் கடன் தந்திருந்தால்இவனும் இளைப்பாறியிருப்பான். இதுவெல்லாம் ஒரு வேலையென நாம் எண்ணியிருக்கக் கூடும் இருந்தும் , வறுமையின் பிடியின் ஒரு விரல் நுனியினை அசைத்துப் பார்க்க அவனுக்கு கிட்டிய வழியில் இதுவும் ஒரு வேலை...அவன் இழந்த உறக்கப் பொழுதுகள் தாண்டி அவன் பொறுப்புகள் அவனிடமிருந்து பறித்த உறவுகளுடனான பொழுதுகள் ஏராளம்...இவன் விடிந்ததும் கூறிடும் வணக்கங்கள் ஏராளம் இருப்பினும் இவனுக்குள்ளும் உள்ள ஆசைகளும் தாராளம்...ஊரெல்லாம் இவன் மிதிவண்டி சக்கரத் தடங்கள் பதிந்திருந்தும் ஒரே ஒரு வீட்டின் வாசல் தாண்டி இவன் பாதங்கள் பட்டதில்லை...ஆனால் இவன் வருகைக்காக காத்திருக்காத அரசு அலுவலர்களும் கூட கிடையாது...ஆனாலும் இவருக்கு கொஞ்சம் தாமதம் கண்டாலும், கிடைக்கும் வஞ்சப்புகழ்ச்சிப் பாராட்டிற்கு அளவே இருக்காது...
இத்தைகைய ஒரு பேப்பர் போடும் தொழிலாளி சொக்கன் என்ற கதாப்பாத்திரமும் , செவப்பன் என்பவரின் கதாப்பாத்திரமும் தரும் தாக்கமும் , அறிவுமணி அவர்கள் தரும் நுணுக்கமான அவரது நாவல் உத்திகளும் , திண்டுக்கல் மாவட்ட வழக்கு மொழிகளை கையாண்டிருக்கும் விதமும் , இவரது அரசியல் பார்வையும் , மக்களின் வாழ்க்கை முறி மீதான மிகத் தெளிவான பார்வையும் , இந்நாவலில் இவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது. இவரது உழைப்பும் இந்நாவலுக்கான இவரின் முயற்சியின் அளவும் அறிய முடிகிறது...என்னைக் கவர்ந்த வரிகள் இவை.
சொக்கனுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது .வாடிப்பட்டிக்குள் நுழையும் போதுதான் அந்தப் போஸ்டர்களைக் கண்டான் . சுந்தரம் போட்டோவுடன் கூடிய வால் போஸ்டர்கள்...


