Seerbooks
கானகத்தின் குரல்
கானகத்தின் குரல்
- புத்தகம் 7 - 10 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
Couldn't load pickup availability
கானகத்தின் குரல் வாசிக்கையில் நாய்களின் வேறொரு உலகத்தை கண்டு பிரமித்து போவீர்கள். அவைகளின் குரூரமான குணத்தைக் கண்டு உறைந்து போவீர்கள். நாய்களின் போர்க்குணத்தை வாசிக்கையில் உடல் சிலிர்த்து விடும். மனிதனின் வாழ்க்கையே படித்து ருசித்த வாசகர்களுக்கு பக் வாழ்க்கையை வாசிக்க புது அனுபவமாக இருக்கும்.
பக் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள மேற்கொள்ளும் சவால்கள், துரோகம், வஞ்சகம், போட்டி , பொறாமையென பக் செய்யும் செயல்கள் அனைத்தும் நம்மையே பிரதிபலிக்கும். நீதிபதி வீட்டில் நாயாக இருந்து, நாய்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது வரை ஒவ்வொரு படிநிலையிலும் பக் சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும்
இடங்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.
கானகத்தின் குரல் நாவல் சொல்வது ஒன்றே ஒன்றுதான். காலம் எவ்வளவு மோசமான நிலைமைக்கு நம்மைத் தள்ளினாலும் அதை எதிர்த்துப் போராடி வெல்வதே வாழ்க்கை.
